நீங்களும் எந்த சாப்பாடு மாதிரினு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கா.. இதோ உங்களுக்காக.

    நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எல்லோருக்குமே நமது ராசிக்கு என்ன பலன் என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் தான். இதனாலேயே இந்த எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் இப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இப்படிப்பட்டவர்கள் என அடிக்கடி ஏதாவது ஒரு யூக ஜோதிடம் சமூகவலைதளங்களில் வலம் வருவது வாடிக்கை. அதில் சில குசும்பு ரகமாக ஜாலியாக இருக்கும். இப்போதும் அப்படித்தான், உணவுப் பொருட்களை வைத்து ராசிபலன் ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 'இந்தப் பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடச்சது..' என சவர்மா, பிரியாணி, பரோட்டா, பீட்சா என கலர்புல்லாக இருக்கிறது இந்த ராசிபலன். வழக்கமாக ராசிபலனைப் பார்த்தால் மனதுக்குத்தான் இதமாக இருக்கும் என்றால், இந்த ராசிபலனைப் பார்த்தால் வாயில் எச்சில் தான் ஊறுகிறது.