குக் வித் கோமாளி சீசன் – 3 ஆரம்பிக்க போகுதா? ரக்சனுக்கு ஜோடியா இந்த விஜே வராங்களா? அப்போ சீசன் 3 வேற லெவல் ல இருக்குமே!!! முழு விவரம் உள்ளே!!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி… சிறியவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்தது.. அதற்கும் மேல்.. இதன் முதல் பாகத்தை விட இரண்டாவது சீசன்.. மாபெரும் வெற்றி பெற்றது..

வழக்கமாய்.. பிக்பாஸ் தான் முதல் இடத்தில் இருக்கும், ஆனால். இந்த சீசன் 2 டி.ஆர்.பி யில் அதையே தூக்கி சாப்பிட்டு விட்டது.. மேலும் வெறுப்பாளர்களை சிறிது கூட சம்பாதிக்காமல்… வரவேற்பாளர்களை மட்டுமே பெற்ற ஒரே நிகழ்ச்சி.. இது மிகவும் ஹிட் ஆனதுக்கு முக்கிய காரணம் என்று பார்த்தால், அதில் கலந்து கொண்ட கோமாளிகள் தான்..
இதில் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, தங்கத்துரை, சத்தி சரத். மற்றும் சுனிதா ஆகியோர் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தனர். என்று தான் சொல்ல வேண்டும்.. அதற்கு, மேல் இவர்கள் மட்டுமில்லாது.. இதில் கலந்துக்கொண்ட நடிகர் அஷ்வின், கனி, ஷகிலா, மதுரை முத்து, பாபா மாஸ்டர், தீபா அக்கா, பவித்ரா, தர்ஷா ஆகியோருக்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு மட்டுமல்லாது பட வாய்ப்புகள் கூட வந்து குவிகின்றனர்..
இந்நிலையில் விரைவில்.. இதன் அடுத்த பாகம்.. அதாவது சீசன்–3 ஆரம்பமாக போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.. மேலும் இதில் ரக்க்ஷனுடன், இணைந்து இன்னொரு நபரும். ஆங்கரிங் செய்யப் போவதாக தகவல் கசிந்துள்ளது.. அது வேற யாருமில்லை.. சீசன் 1 மற்றும் 2 வில் மக்களுக்கு மிகவும் பிடித்த கோமாளியான.. நம் வி.ஜே மணிமேகலை தான்…



0 Comments