ஸ்கெல்லிங் தொடர் சைக்கிள்கள் GoZero வலைத்தளம் மற்றும் பல ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனையில் உள்ளன. ரூ.2999 அட்வான்ஸ் தொகையை அளித்து ஸ்கெல்லிங் லைட்டை முன்பதிவு செய்யலாம்.
- Gozero Mobility மற்றொரு மலிவு விலை மின்சார சைக்கிளான ஸ்கெல்லிங் லைட்டை அறிமுகப்படுத்தியது.
- நகர எல்லைகளுக்குள்ளும் அதற்கு அப்பாலும் இயக்க பொருத்தமான வகையில் ஸ்கெல்லிக் லைட் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஸ்கெல்லிங் லைட்டின் ஆரம்ப விலை, இதை அனைவரும் வாங்கும் வரம்பிற்குள் வைத்துள்ளது.
- Best Electric Cycle-ஐ அறிமுகம் செய்தது Toutche, முழு சார்ஜில் 80 கி.மீ செல்லும்

இந்த மின்சார சைக்கிளின் (Electric Cycle) விலை ரூ.19,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர
எல்லைகளுக்குள்ளும் அதற்கு அப்பாலும் இயக்க பொருத்தமான வகையில் ஸ்கெல்லிக் லைட்
சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச்
25 கி.மீ ஆகும். இதன் அதிகபட்ச வேகம் ஒரு மணி
நேரத்துக்கு 25
கி.மீ ஆகும்.
பிரிக்கக்கூடிய EnerDrive 210 Wh லித்தியம் பேட்டரி பேக் மற்றும்
250 W பின்புற ஹப்-டிரைவ் மோட்டார் மூலம் இந்த பைக்
இயக்கப்படுகிறது. மேலும் இது GoZero Drive கன்ட்ரோல் 2.0 எல்இடி டிஸ்ப்ளே யூனிட்டால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன்
மூலம் ரைடர் மூன்று பெடல் அசிஸ்ட் முறைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும்.
இதன் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய 2.5 மணிநேரத்திற்கு மேல் ஆகும். ஸ்கெல்லிங் லைட்டில் ஒரு அலாய்
ஸ்டெம் ஹேண்டில், 26x1.95 டயர்கள்,
சிறப்பு வி-பிரேக்குகள் மற்றும் ஒரு உறுதியான பிரெண்ட் ஃபோர்க்
ஆகியவை உள்ளன. புதிய ரேஞ்சுகளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது Nexzu Mobility
0 Comments