உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூட தேங்காய் பால்.

 

  • தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும்.


  • தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது.


  • அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ளவேண்டும். எலும்புகளை பலப்படுத்தி, சரும நோய்களை தீர்த்து, இரத்த சோகையை விரட்டும் தேங்காய் பால். 

  • உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும்.
  • அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான். செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இத்தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.

  • ஆகவே கீல்வாதம் இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • இரத்தக் கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள், பொட்டாசியம் கலந்த உணவை உண்டால், இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். 

  • இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும்.

Post a Comment

0 Comments