ஒரு லட்சத்துக்கும் அதிகமான முன்பதிவு செய்யப்பட்ட பின்னர், வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை ஹோம் டெலிவரி செய்ய ஓலா திட்டமிட்டுள்ளது.

  • ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு வெறும் 499 ரூபாய்க்கு தொடங்கியது.
  • முதல் நாள் புக்கிங்கிலேயே சாதனை அளவு முன்பதிவு செய்யப்பட்டது.
  • ஒலா தற்போது வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியை அளித்துள்ளது.


Ola Electric Scooter: கடந்த சில மாதங்களாக அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு அதிரடியாக இருந்தது. முதல் நாள் புக்கிங்கிலேயே சாதனை அளவு முன்பதிவு செய்யப்பட்டது.

    ஓலா ஸ்கூட்டருக்கான (Ola Electric Scooter) முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு வெறும் 499 ரூபாய்க்கு தொடங்கியது. இந்த மின்சார ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். 24 மணி நேரத்திற்குள், இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு 1 லட்சத்தைத் தாண்டியது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஹோம் டெலிவரி

    ஒரு லட்சத்துக்கும் அதிகமான முன்பதிவு செய்யப்பட்ட பின்னர், வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை ஹோம் டெலிவரி செய்ய ஓலா திட்டமிட்டுள்ளது. ஊடக அறிக்கையின்படி, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டீலருக்கு அனுப்பாது, அதை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வீட்டிற்கே டெலிவரி செய்யும். அதாவது, இந்த முழு டீலில், உற்பத்தியாளர் அதாவது ஓலாவிற்கும் வாங்குபவருக்கும் இடையில் எந்தவொரு டீலர்ஷிப் நெட்வொர்க்கிற்கான தேவையும் இருக்காது.

லாஜிஸ்டிக்ஸ் பிரிவு அமைக்கப்பட்டது

    ஊடக அறிக்கையின்படி, ஓலா ஒரு தனி லாஜிஸ்டிக்ஸ் பிரிவை உருவாக்கியுள்ளது. இது நேரடி டெலிவரி செயல்முறைக்கு உதவும். இந்த பிரிவு வாடிக்கையாளர்களிடமிருந்து தேவையான ஆவணங்கள், கடன் விவரங்கள், விண்ணப்ப விவரங்கள் ஆகியவற்றை சேகரிக்கின்றது. இந்த பணிகள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலேயே செய்ய முடியும்.

    லாஜிஸ்டிக்ஸ் பிரிவே ஸ்கூட்டரைப் பதிவு செய்து வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யும். ஹோம் டெலிவரிக்காக நாட்டின் பல இடங்களில் டெலிவரி மையங்கள் (Delivery Hub) அமைக்கப்படும். ஸ்கூட்டர்கள் இங்கு வைக்கபட்டு அங்கிருந்து வாடிகையாளர்களின் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.

18 நிமிடங்களில் 50% சார்ஜ்!

    ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரைப் (Electric Scooter) பொறுத்தவரை, வெறும் 18 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 50 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம். இந்த சார்ஜில் சுமார் 75 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. முழு சார்ஜில் இந்த ஸ்கூட்டர் சுமார் 150 கி.மீ ரேஞ்சை அளிக்கின்றது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 10 வண்ணங்களில் வரும்

    ஓலா (Ola) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தலைவருமான பவிஷ் அகர்வால் ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பைத் தொடங்கினார். அதில் அவர் ஸ்கூட்டருக்கான வண்ணங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டார்.



    மக்கள் இந்த மின்சார வாகனத்தை எந்த வண்ணத்தில் வாங்க விரும்புகிறார்கள் என்று அறிந்து கொள்ள இந்த முயற்சி எடுக்கப்பட்டது. வெள்ளை நிற ஸ்கூட்டரின் ஒரு படத்தை பவிஷ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஓலா எலக்ட்ரிக் 10 வண்ணங்களில் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.

ஓலா ஸ்கூட்டரின் விலை எவ்வளவு இருக்கும்?

    ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ வகைகளில் அறிமுகப்படுத்தப்படும். அவற்றின் விலை ரூ.80,000 முதல் ரூ .1.1 லட்சம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான டீசர் ரிலீஸ், சாலைகளில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்

    ஓலா ஸ்கூட்டரின் (Ola Scooter) வேகம், ரேஞ்ச், வீச்சு,திறன், தொழில்நுட்பம் மற்றும் கையாளும் முறை ஆகியவை இதை ஒரு கேம் சேஞ்சராக, அதாவது சந்தையிலேயே மிகச் சிறந்த வாகனமாக மாற்றும் என்று அகர்வால் கூறினார்.

துவக்கத்தில், இந்த ஸ்கூட்டர் கருப்பு நிறத்தில் வெளிவரும். எனினும், வரும் காலங்களில் மேலும் இரு வண்ணங்களில் ஓலா எலக்ட்ரிக் வாகனத்தை வெளியிடுவதற்கான திட்டம் உள்ளது என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கிடையில், பார்குருவில் 500 ஏக்கர் பரப்பளவில் வரும் 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஓலா எலக்ட்ரிக் ஃப்யூச்சர் ஃபாக்டரி குறித்த தகவல்களை தெரிவிக்க, அகர்வால் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை (MK Stalin) சந்தித்தார்.

அடுத்த ஆண்டு இந்த தொழிற்சாலை முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட பிறகு, இங்கு, ஒரு ஆண்டுக்கு 10 மில்லியன் இ-ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்படும். இந்த நிலையில், இது உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தொழிற்சாலையாக இருக்கும். இத்திட்டத்தால் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

இந்தியா முழுவதும் 1 லட்சம் மின் சார்ஜிங் நிலையங்கள்

    இ-ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள, நாடு முழுவதும் 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என நிறுவனம் முன்பு அறிவித்திருந்தது.

    அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டில், 5000 சார்ஜிங் நிலையங்கள் உருவாக்கப்படும் என்றும், பின்னர்  இன்னும் அதிக அளவிலான நிலையங்கள் இவற்றுடன் சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, 36 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்யப்பட்டால், குறைந்தபட்சமாக இந்த ஸ்கூட்டர் 150 கி.மீ மைலேஜ்ஜை அளிக்கும்.