கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் ஆண்டுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கிய
பிரம்ம கமலம் பூக்கள். கிருஷ்ணகிரி
மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பிரம்ம கமலம்!
பிரம்ம கமலம் தாவரம்
பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வ மலர் வகை
தாவரத்தின் இலையை வெட்டி வைத்தாலே புதிதாக முளைத்துவிடும்.
இலையே மண்ணில் வேர்விட்டு வளர்ந்து, பிறகு
தண்டு போல் செயல்படும். இலையின் பக்கவாட்டில், சிறுசிறு
கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும்.
அவற்றின் கணுக்களில் புதிய மொட்டுக்கள் உருவாகி மலர்களாய் மலரும். இந்த மலர்கள்
சாதாரணமாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு
நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை.
ஒரே
செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது. பிரம்மாவிற்கு உகந்த பூவான
பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது.
பிரம்ம கமலம்
இந்த மலர் இரவில் மலர்வதற்குக் காரணம் வௌவால்கள், பெரும்
அந்திப்பூச்சிகளால் (moths) இவை மகரந்தச்சேர்க்கை
செய்யப்படுவதால்தான்.
நிலவு, நட்சத்தர ஒளி போன்ற குறைந்த
வெளிச்சத்தில் இந்த மகரந்தச்சேர்க்கையாளர்கள் இத்தாவரத்தைக் கண்டுபிடிக்கும்
வகையில் பெரிய வெள்ளை நட்சத்திரம் போல,
ஒரு தட்டு அளவுக்கு
மலர்கள் அமைந்திருக்கும். இந்தப் பூவின் வாசம் மனதுக்கு இனிய மணம் கொண்டது.
பிரம்ம கமலம் வாசம்:
அத்துடன் இந்தப் பூவின் வாசம் அந்த பகுதியையே
ஈர்க்கும் வல்லமை கொண்டது. இவை ஓர்க்கிட் வகையைச் சேர்ந்தவை என
தெரிவிக்கப்படுகிறது.
மலர்ந்துள்ள பிரதேசத்தையே ஈர்க்கும் தன்மையுடையது. அதற்குக் காரணம், Benzyl
Salicylate வேதிப் பொருள்.
தாவரத்தின் பிறப்பிடம்:
இந்த வித்தியாசமான மலர் இமயமலையைச்
சேர்ந்தது. ஆனால், இப்போது சிலர் நம் ஊர்களிலும் வளர்த்து
வருகிறார்கள். இதற்கு நிறைய தண்ணீர் வேண்டுமென்ற அவசியம் இல்லை. காரணம் இது கள்ளி
வகையைச் சேர்ந்த செடி. ஆனால், பாலைவனங்களில் வளரும் கள்ளி
வகை அல்ல.
இத்தாவரத்தின் அறிவியல் பெயர் Epiphyllum oxypetalum.பூக்கும் காலம்
இளவேனில் காலத்தில் மட்டுமே பூக்கும் இந்த பூ, நள்ளிரவில்
பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும் என்பதால் இது அதிசய பூவாக கருதப்படுகிறது.
ஒரே செடியில்
ஒரே செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள்
பூக்கக்கூடியது. பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது
மிகவும் அரிதானது.
அதிசய பூ
அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா
படுத்திருப்பது போன்று தோன்றும். அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும்
காணப்படும். ஆனால் இந்த பூவானது விரைவில் வாடிவிடும்.
நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ
இந்த
மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும் போது நாம் என்ன நினைத்து
வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை உள்ளது.
வீட்டு தோட்டத்தில் எவ்வாறு வளர்ப்பது:
இத்தகைய
சிறப்பு வாய்ந்த பிரம்ம கமலத்தை நம் வீட்டு தோட்டத்தில் வளர்க்க சிறந்த
தோட்டப்பராமரிப்பு மற்றும் இந்த செடி பற்றிய அறிவு இருந்தால் இந்த செடியை
வளர்க்கலாம்.
0 Comments